பேரரசர் ஆல்பிரட்
பேரரசர் ஆல்பிரட் | |||||
---|---|---|---|---|---|
வெசெக்சு மன்னர் | |||||
ஆட்சிக்காலம் | 23 ஏப்ரல் 871 – 26 அக்டோபர் 899 | ||||
முன்னையவர் | எத்தெல்ரெட் | ||||
பின்னையவர் | எட்வர்டு | ||||
பிறப்பு | 849 அரசு அரண்மனை, ஆக்சுபோர்டுசயர் | ||||
இறப்பு | 26 அக்டோபர் 899 (அகவை 50) வின்செசுட்டர் | ||||
புதைத்த இடம் | அண். 1100 ஹைடு அபே, வின்செசுட்டர் | ||||
துணைவர் | ஏல்சுவித் | ||||
குழந்தைகளின் பெயர்கள் | எத்தெல்ஃபிலெட் எட்வர்டு எத்தெல்கிபு எத்தெல்வெர்டு எல்ஃப்திரித் | ||||
| |||||
மரபு | வெசெக்சு மாளிகை | ||||
மரபு | வெசெக்சு மாளிகை | ||||
தந்தை | எத்தெல்வூல்ஃப் | ||||
தாய் | ஓசுபுர் |
பேரரசர் ஆல்பிரட் (Alfred the Great; 849, – 26 அக்டோபர் 899) என்பவர் ஆங்கிலோ சாக்சானிய அரசின் வெசெக்ஸ் பகுதியை கி. பி. 871 முதல் 899 வரை ஆண்ட அரசர் ஆவார். இவரது அண்ணன் எதல்ரெட் இறந்த பின் அரியணை ஏறிய ஆல்பிரட் மிகத் திறமையான ஆட்சியாளராவார். ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின் வில்டன் என்ற இடத்தில் நடந்த போரில் டேனியர்களிடமிருந்து வெசக்சு நாட்டைக் காத்த பெருமைக்குரியவர்[1]. ஆங்கிலோ சாக்சானிய அரசர்களும் முதன் முதலில் பேரரசர் என அழைக்கப்பட்ட பெருமைக்குரியர் இவரே ஆவார்.[2][3] இவருடைய வாழ்க்கை வரலாறு வேல்சு நாட்டைச் சேர்ந்த அறிஞரான அசெர் என்பவரால் பத்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. பேரரசர் ஆல்பிரெட் சிறந்த கல்வியாளராகவும், சிறாந்த நிர்வாகியாகவும், கருணையுள்ளம் கொண்டவராகவும் விளங்கினார். தனது நாட்டில் கல்வி, அமைதி, ஒழுங்கு, சட்டம், இராணுவம் ஆகியவை நிலைபெற அரும்பணியாற்றினார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ நா. ஜெயபாலன், 'இங்கிலாந்து வரலாறு- அரசியலமைப்பு வரலாறுடன்', மோகன் பதிப்பகம், சென்னை 1986. பக்கம் 9,10
- ↑ "Alfred the Great (849 AD - 899 AD)".
- ↑ Cnut the Great, who ruled England from 1016 to 1035, was Danish.